Published : 11 Aug 2014 07:38 PM
Last Updated : 11 Aug 2014 07:38 PM
மாநிலங்களவைக்கு வராத எம்.பி.க்கள் விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா ஆகியோரை முன்வைத்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் குறைந்தது 33 எம்.பி.க்களின் வருகைப் பதிவேடு 50%-தான் காண்பிக்கிறது.
இரு அவைகளையும் சேர்த்து 33 எம்.பி.க்கள் மக்களவைப் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை என்று நாடாளுமன்ற வருகைப் பதிவேட்டை ஆராய்ந்த போது தெரிய வந்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, மற்றும் தபஸ் பால் ஆகியோர் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட நாடாளுமன்றம் பக்கம் வந்ததில்லை.
மக்களவைக்கு அவ்வப்போது மட்டுமே வருவோர் பட்டியலில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங், மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோர் உள்ளனர்.
பழுத்த அரசியல்வாதிகளான அமர்சிங், மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கூட குறைந்தது பாதிநாள் மக்களவைக்கு வருவதில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆகவே மக்களவைக்கு வராமல் இருப்பது என்பது கவுரவ எம்.பி. பதவி அளிக்கப்பட்டோரின் தனியுரிமை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பலரும் நிறைய நாட்கள் அவைக்கு வருவதில்லை.
உதாரணமாக கடந்த ஆட்சியின் போது திரினமூல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு சோரன், சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், பாஜக எம்.பி. வித்தல்பாய் ஹன்ஸ்ராஜ்பாய் ரதாதியா ஆகியோர் நாடாளுமன்ற அமர்வுகளில் பெரும்பாலும் கலந்து கொண்டதில்லை.
இவர்களது வருகையின்மை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலும் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT