Published : 07 Jan 2025 02:13 AM
Last Updated : 07 Jan 2025 02:13 AM

டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு: தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்​ண​யிக்​கப்​பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்​பிக்​கப்​பட்​டுள்ளது என்று மத்திய தலைமை கணக்​குத் தணிக்கை​யாளர் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.

டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி​யில் உள்ளது. முதல்​வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்​தார். அவருக்கு ஒதுக்​கப்​பட்ட அரசு இல்லத்தை புதுப்பிக்க கோடிக்​கணக்கான ரூபாயை வீணாக செலவு செய்​ததாக பாஜக, காங்​கிரஸ் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலை​யில், மத்திய கணக்​குத் தணிக்கை​யாளர் (சிஏஜி) நடத்திய ஆய்வில் அளவுக்​க​தி​கமாக செலவு செய்​துள்ளதாக குற்றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சிஏஜி அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்ள​தாவது: டெல்லி முதல்வர் அரசு இல்லத்தை புதுப்​பிக்க ரூ.7.9 கோடி நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், ரூ.33 கோடி செலவிடப்​பட்​டுள்​ளது. முதல்வர் இல்லத்​தைப் புதுப்​பிக்​கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்​கியது. அதில் ரூ.28.9 லட்சத்​துக்கு 88 இஞ்ச் எல்ஜி டிவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. அத்துடன், சோனி உட்பட பல்வேறு நிறு​வனங்​களின் 10 டிவி.க்கள் ரூ.43.9 லட்சத்​துக்கு வாங்​கப்​பட்​டுள்​ளது. ரூ.3.2 லட்சத்​தில் பல கதவுகள் கொண்ட பிரிட்ஜ், ரூ.1.8 லட்சத்​தில் மைக்ரோ ஓவன், ரூ.6.5 லட்சத்​தில் ஸ்டீம் ஓவன், ரூ.1.9 லட்சத்​தில் வாஷிங் மெஷின், ரூ.13 லட்சத்​தில் 10 படுக்கை, சோபாக்கள் வாங்​கப்​பட்​டுள்ளன.

அத்துடன் டெல்லி முதல்வர் இல்லத்​தில் ஆடம்பர குளியல் தொட்டி (ஜாகுஸ்​ஸி), நீராவி குளியல் (சானா), மசாஜ் அறை (ஸ்பா) போன்ற​வற்றை பொதுப் பணித் துறை நிறு​வி​யுள்​ளது. அத்துடன் வேலை​யாட்கள் தங்க ரூ.19.8 கோடி​யில் 7 விடு​திகள் கட்டப்​பட்​டுள்ளன. டெல்லி முதல்வர் இல்லத்​தைப் புதுப்​பிக்​கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்​துள்ளது. இவ்வாறு சிஏஜி அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

தவிர ஆடம்பர பொருட்​கள், ஓவியங்​கள், கலைப் பொருட்கள் என ஏராளமாக வாங்கி முதல்வர் இல்லம் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. முதல்வர் அரசு இல்லத்​துக்கு செலவிடப்​பட்ட தொகை, கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் கணக்​கிடப்​பட்​டுள்ளது என்றும், இன்றும் நிறைய ஆவணங்கள் இல்லை என்று சிஏஜி கூறி​யுள்​ளது. இந்த அறிக்கை டெல்லி துணை நிலை ஆளுநரிட​மும் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. பொதுப் பணித் துறை செய்த பணிகள் பல முறை மாற்​றப்​பட்​டுள்​ளது. இதில் பல்வேறு முறை​கேடுகள் நடைபெற்றுள்ளதை சிஏஜி அறிக்கை சுட்​டிக் காட்​டி​யுள்​ளது. டெல்லி முதல்வர் இல்லத்​துக்கு கேஜ்ரிவால் அரசு கோடிக்​கணக்​கில் செலவு செய்த விவகாரம் சட்டப்​பேரவை தேர்​தலில் எதிரொலிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x