Published : 05 Jan 2025 01:53 AM
Last Updated : 05 Jan 2025 01:53 AM

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

புதுடெல்லி: கிழக்கு டெல்லி சாகர்​பூரைச் சேர்ந்​தவர் துஷர் சிங் பிஸ்த் (23). பிபிஏ பட்டம் பெற்ற இவர் நொய்​டா​வில் உள்ள தனியார் நிறு​வனத்​தில் வேலைக்கு ஆட் களை தேர்வு செய்​யும் நபராக பணியாற்றுகிறார். இவர் பம்பிள் மற்றும் ஸ்னாப்​சாட் போன்ற பிரபல டேட்​டிங் செயலிகளில் போலி பெயரில் கணக்கு தொடங்கி இந்தியா வந்திருக்​கும் அமெரிக்க மாடல் என அறிமுகம் செய்​துள்ளார்.

செயலி ஒன்றின் மூலம் விர்​சுவல் சர்வதேச மொபைல் எண்ணை பெற்று அதை பயன்​படுத்​தி​யுள்​ளார். பிரேசில் நாட்​டைச் சேர்ந்த ஒரு மாடலின் போட்​டோவை இவர் பயன்​படுத்​தி​யுள்​ளார். இதைப் பார்த்து 18 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் பலர் இவருடன் நட்பை ஏற்படுத்​தி​யுள்​ளனர். இவர்​களின் நம்பிக்கையை பெற்​றபின்பு, போன் எண்கள், தனிப்​பட்ட போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு பெற்றுள்​ளார். மாடலிங் துறைக்கு செல்ல விரும்​பும் பெண்கள் கவர்ச்சி உடையில் போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்​பி​யுள்​ளனர்.

முதலில் பொழுது​போக்​குக்காக இந்த செயலில் ஈடுபட்ட துஷர் சிங், நாளடை​வில் அந்த பெண்களை மிரட்டி பணம் பறிக்​கும் செயலில் ஈடுபடத் தொடங்​கினார். அவர்கள் அனுப்பிய கவர்ச்​சியான போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச வலைதளங்​களில் விற்று விடு​வதாக கூறி பணம் கேட்டு மிரட்​டி​யுள்​ளார். சிலர் இதற்கு பயந்து துஷர் சிங் கேட்​கும் பணத்தை அவருக்கு அனுப்​பி​யுள்​ளனர். இதுபோன்ற மோசடி​யில் கடந்த 3 ஆண்டு​களாக ஈடுபட்டு 700 பெண்களை துஷர் சிங் ஏமாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு இவரது வலையில் சிக்கிய டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மேற்கு டெல்லி சைபர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். துஷர் சிங்கின் செயல்​பாடுகளை கண்காணித்த போலீ​ஸார் அவர் வசிக்​கும் சாகர்​பூருக்கு சென்று அவரை கைது செய்து அவரது மொபைல்போனை பறிமுதல் செய்​தனர். குற்றச் செயல்​களுக்கு பயன்​படுத்திய விர்​சுவல் சர்வதேச போன் எண்ணுடன் கூடிய மொபைல் போன் பறிமுதல் செய்​யப்​பட்​டது. அதில் ஏராளமான தகவல்கள் உள்ளன. டெல்லி மற்றும் அதன் சுற்று​வட்​டாரத்தை சேர்ந்த பல பெண்கள் அவரிடம் சாட் செய்​திருக்கும் தகவல்கள் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்ளன. அதில் 4 பேரிடம் அவர் பணம் பறித்​துள்ளது தெரிய​வந்​தது. அவரிடம் 13 கிரெடிட் கார்​டுகள் இருந்தன. அவரிடம் 2 வங்கி கணக்​குகள் இருந்​துள்ளன. ஒரு கணக்கை பெண்​களிடம் இருந்து பணம் பறிப்​ப​தற்காக மட்டும் பயன்​படுத்​தி​யுள்​ளார். 2 வங்கி கணக்கு விவரங்கள் குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர். இவரது தந்தை டிரைவராக பணியாற்றுகிறார். தாய் இல்லத்​தரசி. சகோதரி குரு​கிராமில் ஒரு நிறு​வனத்​தில் பணியாற்றுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x