Published : 24 Jul 2018 08:32 AM
Last Updated : 24 Jul 2018 08:32 AM

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று பந்த்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங் கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. மாநிலப் பிரி வினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் மட்டுமின்றி எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் இதற்காக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்தப் போராட் டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வில்லை. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி கூறும்போது, “சிறப்பு அந்தஸ்து உட்பட மாநிலப் பிரி வினை மசோதாவில் குறிப்பிடப் பட்ட அனைத்து சலுகைகளையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. மத்தி யில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இந்தக் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். எனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் இந்தப் போராட்டம் தேவையற்றது. இதில் காங்கிரஸ் பங்கேற்காது” என்றார்.

இதனிடையே சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பைக் ஊர்வலம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x