Published : 03 Jan 2025 02:49 AM
Last Updated : 03 Jan 2025 02:49 AM

திருப்பதி கோயி​லில் 2024-ம் ஆண்டில் ரூ.1,365 கோடி காணிக்கை

திருமலை: உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.1,365 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலை​யானை தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்​றனர். இதில் வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களில் கூடு​தலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பது வழக்​கம். பிரம்​மோற்​சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்​களில் தினமும் சுமார் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர் கள் ஏழுமலை​யானை நீண்ட வரிசைகளில் காத்​திருந்து தரிசிப்​பர்.

ஆண்டு​தோறும் திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் பக்தர்​களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்​கிறது. இதனால் பக்தர்​களின் உண்டியல் காணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

12 கோடி லட்டுகள் விற்பனை: கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் ஏழுமலை​யானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்​துள்ளனர். ரூ.1,365 கோடியை உண்டியல் மூலம் மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்​களுக்கு இலவசமாக அன்ன​தானம் செய்​யப்​பட்​டுள்​ளது. 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்​யப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x