Published : 02 Jan 2025 08:49 AM
Last Updated : 02 Jan 2025 08:49 AM

டெல்​லி​யில் மனை​வி​யுடன் வியாபார பிரச்​சினை: ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

புதுடெல்லி: டெல்லி மாடல் டவுண்ஸ் கல்யாண் விகார் பகுதி​யில் வசித்தவர் புனித் குரானா. இவருக்கு வயது 40. இவருடைய மனைவி மனிகா ஜகதீஷ் பாவா. இருவருக்​கும் கடந்த 2016-ம் ஆண்டு திரு​மணம் நடைபெற்​றது. இருவரும் சேர்ந்து டெல்​லி​யில், ‘உட்​பாக்ஸ் கபே’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்று தொடங்​கினர். இதற்​கிடை​யில், இருவருக்​கும் இடையில் வியாபாரம் தொடர்பாக கருத்து வேறு​பாடுகள் முற்றி உள்ளது.

இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்​துள்ளனர். இந்த வழக்​கில் விரை​வில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலை​யில், கல்யாண் விகார் பகுதி​யில் உள்ள வீட்​டின் அறையில் புனித் குரானா நேற்று​முன்​தினம் தூக்​குப் போட்டு தற்கொலை செய்து கொண்​டார். தகவல் அறிந்து வந்த போலீ​ஸார், புனித் உடலை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், புனித் மற்றும் மனிகா இருவரும் தொலைபேசி​யில் பேசும் உரையாடலை போலீ​ஸார் கைப்​பற்றி உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட புனித் எழுதிய கடிதத்​தை போலீ​ஸார் கைப்​பற்றி உள்ளனர்.

அதில், “எங்களை சித்​ரவதை செய்​தவர்​களுக்​கு​ ஆதரவாகத்தான் இந்த சட்ட நடைமுறைகள் உள்ளன. இப்போது நான் போகிறேன். இனிமேல் எந்த பணப் பிரச்​சினை​யும் இருக்​காது. அதேபோல் எனது வயதான பெற்​றோர், சகோதரனை இனிமேலும் சித்​ரவதை செய்​வதற்கு எந்த காரணமும் இருக்​காது. நான் என் உடலை அழித்து கொள்​ளலாம். அப்படி செய்​வ​தால் நான் நம்பும் அனைத்​தை​யும் இந்த முடிவு பாது​காக்​கும்” என்று கூறி​யுள்​ளார். இதுகுறித்து மனிகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x