Last Updated : 01 Jan, 2025 03:22 AM

3  

Published : 01 Jan 2025 03:22 AM
Last Updated : 01 Jan 2025 03:22 AM

ஜெர்மனியின் கொலோன் பல்கலை. தமிழ்த் துறை மூடல்: ஐம்பதாயிரம் தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகளின் நிலை என்ன?

புதுடெல்லி: ஜெர்​மனி​யின் கொலோன் நகரில் கொலோன் பல்கலைக்​கழகம் உள்ளது. இதில் கலை மற்றும் சமூக​வியல் கல்விப் புலத்​தின் கீழ் இந்தி​ய​வியல் மற்றும் தமிழ்க் கல்வி துறை செயல்​பட்​டது. 1963 முதல் இயங்கிய இந்த தமிழ்த்துறை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி​யுடன் மூடப்​பட்​ட​தாகத் தகவல் வெளி​யாகி உள்ளது.

சர்வதேச அளவிலான பொருளா​தாரக் கட்டுப்​பாடு தளர்த்​தலால் கொலோன் பல்கலைக்​கழகத்​துக்கு 2014 முதல் நிதிப் பற்றாக்​குறை ஏற்பட்​ட​தால் தமிழ்த் துறை மூடப்​பட்​டதாக கூறப்​படு​கிறது. நிதி இல்லாமல் தமிழ்த் துறை 2 முறை மூடும் நிலை ஏற்பட்​டது. அப்போது இந்து தமிழ்திசை நாளிதழில் கொலோன் பல்கலை. தமிழ்த் துறை குறித்து செய்தி வெளி​யானது. அதன்​பிறகு இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதையடுத்து தமிழ்​நாடு அரசு வழங்கிய ரூ.1.25 கோடி, அமெரிக்க வாழ் இந்தி​யர்​களின் ரூ.1.5 கோடி மற்றும் ஐரோப்பிய தமிழர் கூட்​டமைப்​பின் ரூ.23 லட்சம் ஆகிய​வற்​றால் 2021 ஜூலை மாதம் தமிழ்த் துறை தப்பியது. இந்த நிதி உதவி​யால் தமிழ், ஆங்கிலம், ஜெர்​மனி, சம்ஸ்​கிருதம், இந்தி, பாலி ஆகிய மொழிகள் அறிந்த ஸ்வென் வொர்ட்​மான், ஒப்பந்த முறை​யில் உதவிப் பேராசிரியரானார். அவருடைய பணி காலம் கடந்த அக்டோபருடன் முடிந்​துள்ளது. அதன்​பிறகு வேறு யாரை​யும் நியமிக்​காமல், கடந்த 60 ஆண்டு​களாக இயங்கி வந்த தமிழ் துறையை கொலோன் பல்கலை. மூடி​யுள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெர்​மனிவாழ் தமிழர்கள் கூறிய​தாவது: நிதிப் பற்றாக்​குறை​யால் வேறு​வழி​யின்றி தமிழ்த் துறை மூடப்​பட்டு விட்​டது. இதில் நிரந்தர பேராசிரியராக உல்ரிக்க நிக்​லாஸ் கடைசியாக இருந்​தார். இவர், 2022-ல் ஓய்வு பெறு​வதற்கு சில மாதங்கள் முன்பு, ஸ்வெர்ன் வொர்ட்​மான் ஒப்பந்த முறை​யில் நியமிக்​கப்​பட்​டார். அதன்​பின், மாணவர் சேர்க்கை​யும் நடைபெற்​றதாக தெரிய​வில்லை. இதுகுறித்து நிதி அளித்​தவர்​களும் கேள்வி எழுப்​ப​வில்லை. தமிழ்த் துறை மூடலை தடுக்க இந்தியா சார்​பில் ஒரு தமிழ் இருக்கை அமைத்​திருக்​கலாம். மத்திய அரசு சிங்​கப்​பூரில் அமைப்பது போன்ற திரு​வள்​ளுவர் மையத்தை கொலோன் பல்கலைக்​கழகத்​தில் அமைத்​திருந்​தா​லும் இந்த தமிழ்த் துறை தப்பி​யிருக்​கும்.

இனி அதன் நூலகத்​தி​லுள்ள முக்​கியமான நூல்​கள், பழைய ஓலைச் சுவடிகள் உள்ளிட்​ட​வற்றை காப்​பாற்ற வேண்​டும். இவற்றை யாராவது பாது​காத்து ஆய்வுகள் செய்ய முன்​வந்​தால் அவர்​களிடம் அளிக்க பல்கலைக்​கழகம் தயாராகும் எனக் கேள்​விப்​படு​கிறோம். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

தமிழ்த் துறை சார்​பில் சர்வ தேச ஆய்விதழ் ஒன்று வெளி​யாகி வந்தது. இத்துறை​யின் அதிகாரப்​பூர்வ கலாச்சார தொடர்பு பட்டியலில் செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனம், புதுச்​சேரி​யின் பிரெஞ்சு மொழி நிறு​வனம், தஞ்சாவூரின் தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் பெரி​யார் மணியம்மை பல்கலைக்​கழகம் ஆகியவை இடம்​பெற்றிருந்தன.

தமிழகத்​துக்கு வெளியே உள்ளவற்றில் அமெரிக்​கா​வின் சிகாக்​கோவுக்கு அடுத்த நிலை​யில் இத்​துறை​யின் நூல​கம் பெரியது. இ​தில் 50 ஆ​யிரத்​துக்​கும் மேற்​பட்ட பழம்​பெரும் தமிழ் நூல்​கள், தமிழ் இதழ்​கள், ஓலைச் சுவடிகள் உள்ளன. அவற்றின் நிலை இப்​போது கேள்​விக்​ குறி​யாக உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x