Published : 30 Dec 2024 02:16 AM
Last Updated : 30 Dec 2024 02:16 AM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சீக்கிய மத வழக்கப்படி அவரது உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் அஸ்தி குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிபுக்கு நேற்று காலையில் கொண்டுவரப்பட்டது. பின்னர் அருகில் உள்ள யமுனை நதியில் அவரது அஸ்தியை உறவினர்கள் கரைத்தனர். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், மகள்கள் உபிந்தர், தாமன், அம்ருத் உள்ளிட்ட உறவினர்கள் குருத்வாராவில் சடங்குகளை செய்தனர். குறிப்பாக, ஷபாத் கீர்த்தனை (குரு கிரந்த் சாஹிப்), பாத் (குர்பானி) பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT