Last Updated : 03 Jul, 2018 02:50 PM

 

Published : 03 Jul 2018 02:50 PM
Last Updated : 03 Jul 2018 02:50 PM

புதிய இந்தி பட நாயகனாக லாலுவின் மூத்தமகன்

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் (வயது 29) புதிய இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு பொருத்தமாக நடிக்க கதாநாயாகியை தேடி வருகிறார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு மற்றும் பிஹார் முன்னாள் முதல்வரான ரப்ரி தேவியின் மூத்த மகன் தேஜ் பிரதாப். கடந்த 2015-ல் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன்பின், மருத்துவ நலத்துறை அமைச்சரானார். பிறகு மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் தேஜ் பிரதாப்பின் பதவி பறி போனது.

இந்நிலையில், கடந்த மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்த தேஜ் பிரதாபிற்கு பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பது நீண்ட கால விருப்பம். இதனால், தான் நாயகனாக நடிக்கும் படத்தினை தானே தயாரிக்க தேஜ் பிரதாப் முடிவு செய்துள்ளார். அடுத்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் இந்த படத்தின் பெயர் ‘ருத்ரா: தி அவ்தார்’ ஆகும்.

இதுகுறித்த அறிவிப்பை தேஜ் பிரதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது படம் அடுத்த வருடம் இறுதிக்குள் நாடு முழுவதிலும் வெளியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் நடிக்க புது முக நாயகியை தேடிக்கொண்ண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோல், திரைப்படத்தில் தேஜ் பிரதாப் நடிப்பது முதன்முறை அல்ல. ஏற்கெனவே இவர், அபஹாரன் உத்யோக்’ எனும் போஜ்புரி மொழிப்படத்தில் 2001-ல் நடித்துள்ளார். இவர், பாலிவூட் நடிகர் சஞ்சய்தத்தின் தீவிர ரசிகர் இதனால், அவரை போலவே உடல்வாகை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இத்துடன் தன் அரசியல் பணியையும் தேஜ் பிரதாப் தொடர உள்ளார்.

இதுகுறித்து அவர் தன் ட்வீட்டரில் கூறும்போது, ‘எனது பெற்றோரின் ஆசிகளால் நான் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறேன். எனவே, படங்களில் நடிப்பதுடன் எனது அரசியல் பணியையும் தொடருவேன். எனது வாழ்க்கை மற்றும் அரசியலில், தந்தை லாலு தான் எனது நாயகர் என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x