Last Updated : 25 Dec, 2024 01:51 AM

3  

Published : 25 Dec 2024 01:51 AM
Last Updated : 25 Dec 2024 01:51 AM

கோயில்-மசூதி பிரச்சினையில் ஒதுங்கியிருக்க வேண்டும்: மோகன் பாகவத் கருத்துக்கு மடாதிபதிகள், துறவிகள் எதிர்ப்பு

கோயில் - மசூதி மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு சங்கராச்சாரியர்கள், மடாதிபதிகள் மற்றும் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் கடந்த வாரம் புனே நகரில் பேசும்போது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு கோயில் - மசூதி தொடர்பாக புதிய பிரச்சினைகளுக்கு இனி இடமில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி சிலர் இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பதை ஏற்க முடியாது" என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் இக்கருத்துக்கு சமாஜ்வாதி முஸ்லிம் எம்.பி.க்களும், முஸ்லிம் தலைவர்கள் சிலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதேமயம், இந்துக்களின் சில சங்கராச்சாரியர்கள், மடாதிபதிகள் மற்றும் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில பாரத துறவிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறும்போது, "இந்த விவகாரத்தில் பாக்வத்ஜி ஒதுங்கி இருப்பது நல்லது. இதுபோன்ற மத விவகாரங்களை மதத் தலைவர்கள் மட்டுமே எடுக்க முடியும். ஆர்எஸ்எஸ் போன்ற கலாச்சார அமைப்புகள் அல்ல” என்றார்.

ஜோதி பீடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கூறுகையில், "தங்கள் வழிபாட்டுத் தலங்களை இடித்து அவற்றில் தொழுகை நடத்துவதால் இந்துக்கள் வருந்துகின்றனர். இதுபோல் தங்கள் முன்னோர்கள் இவ்வளவு அராஜகம் செய்தனரா என முஸ்லிம்களும் வியந்து நின்று வருந்துகின்றனர். இந்நிலையில் அரசியல் சூழலுக்கு ஏற்ப இதுபோன்ற கருத்தை கூறக் கூடாது" என்றார்.

அயோத்தி அகில பாரதிய வியாஸ் சங்கத்தின் சுவாமி பாலக்தாஸ் கூறுகையில் "இந்த விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் தலைவரான நீங்கள் இந்துக்களுக்காக எதுவும் செய்வில்லை எனில், இப்பணியை மற்றவர்கள் செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் இதற்கான மனோபலத்தை இழந்திருக்கலாம் ஆனால், இந்துக்கள் இன்னும் அதை இழக்கவில்லை” என்றார்.

இதுபோல் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பண்டிதர் சத்யேந்தர் தாஸ், அயோத்தி அனுமன் கோயிலின் தலைமை பண்டிதர் மக்ந்த் ராஜு தாஸ், துளசி பீடாதீஷ்வர் ஜெகத்குரு ராம் பத்ராச்சாரியர் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக மவுனம் காக்கிறது.

இதற்கிடையில் முஸ்லிம் பகுதிகளில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்த கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்கிறது. உ.பி.யில் சம்பல் நகரை தொடர்ந்து முசாபர்நகர், வாராணசி, அலிகர், கான்பூர், ஜோன்பூர், அமேதி என இப்பட்டியல் நீண்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x