Published : 21 Dec 2024 01:28 PM
Last Updated : 21 Dec 2024 01:28 PM
புதுடெல்லி: பாகிஸ்தானியர்களின் 2024ம் ஆண்டு தேடல்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானியர்களால் அதிகம் தேடப்பட்டவர் என்ற பட்டியலின் கீழ் இந்தியரான முகேஷ் அம்பானியின் பெயர் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானியர்கள் ஆசியாவின் பெரும் பணக்காரரின் சொத்து மதிப்பை மட்டுமல்லாமல் குடும்பப் பின்னணி குறித்தும் தேடியுள்ளனர்.
ஆண்டுதோறும் கூகுள் தேடல் தளத்தில் மக்கள் அதிகம் தேடியவைகளின் பட்டியல்களை கூகுள் வெளியிடும் அந்த வகையில் 2024ம் ஆண்டு பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியவைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்நாட்டு மக்களால் அதிகம் தேடப்பட்டவர் என்ற பட்டியலில் இந்தியாவின் தொழிலதிபரான முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி பற்றி பாகிஸ்தானின் கைபர் பக்துன்காவ், சிந்து, பஞ்சாப் மற்றும் தலைநகரான இஸ்லாமாபாத் ஆகிய பிராந்திய மக்கள் அதிகம் தேடியுள்ளனர்.
முகஷே் குறித்த பாகிஸ்தானியர்களின் தேடல்: இந்த பெரும் வியாபார அதிபரின் மதிப்பு என்ன? அவரின் நிகர சொத்து மதிப்பு என்ன போன்றவையே முகேஷ் அம்பானி பற்றிய தேடல்களில் முதலிடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில் அவரைப் பற்றிய வேறு சில விஷயங்களும் தேடப்பட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் மகன், அவரது மகனின் திருமணம், முகேஷ் அம்பானியின் வீடு மற்றும் ரூபாயில் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு போன்றவைகளும் தேடப்பட்டுள்ளன.
முகேஷ் அம்பானி சொத்துகளின் நிகர மதிப்பு: போபர்ஸ்- ன் கூற்றுப்படி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின் நிகர சொத்து மதிப்பு 93.3 பில்லியன் டாலர். அவர் ரூ.120 பில்லியன் டாலர் வருவாய் நல்கக் கூடிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸை நடத்தி வருகிறார். அது பெட்ரோல், தொலை தொடர்பு, ஆயில் மற்றும் கேஸ், ஊடகம், நிதிசேவைகள் மற்றும் சில்லறை வணிகம் போன்றவைகள் உள்ளடக்கியது.
ரிலைன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் மறைந்த தந்தை திருபாய் அம்பானி கடந்த 1966ம் ஆண்டு நிறுவினார். பின்பு கடந்த 2002ம் ஆண்டு அந்நிறுவனம் முகேஷ் அம்பானி, அவரது சகோதரர் அனில் அம்பானியால் பிரித்துக் கொள்ளப்பட்டது.
அம்பானியின் குடும்பம்: முகேஷ் அம்பானி செல்வந்தரான நீதா அம்பானியை மணமுடித்துள்ளார். இவர்களுக்கு, ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி என்ற இரட்டையர்கள் மற்றும் ஆனந்த் அம்பானி என மூன்று வாரிசுகள் உள்ளனர். ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழுவில் இடம்பிடுத்துள்ள இவர்களில் ஆகாஷ் ஜியோவுக்கு தலைவராக உள்ளார், இஷா சில்லறை வணிகம் மற்றும் நிதிச் சேவைகளை நிர்வகிக்கிறார். ஆனந்த் அம்பானி எரிசக்தி வணிகத்தை கவனித்துக் கொள்கிறார்.
இந்தியா பற்றிய பாகிஸ்தானியர்களின் பிற தேடல்கள்: முகேஷ் அம்பானியைத் தவிர வேறு சில இந்திய விஷயங்களைப் பற்றியும் பாகிஸ்தானியர்கள் தேடியுள்ளனர். அதில் சுவாரஸ்யம் தரும் சங்கதியாக பாகிஸ்தானியர்கள் தேடிய சினிமா மற்றும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இந்திய நிகழ்வுகள் மற்றும் படங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்தப்பட்டியலில் ஹீராமண்டி முதலிடத்தில் உள்ளது.
அவர்கள் 12th பெயில், அனிமல், ஸ்ட்ரீட் 2, மிசாபூர் மற்றும் பிக் பாஸ் போன்றவைகளையும் தேடியுள்ளனர். கிரிக்கெட் பட்டியலில் இந்தியா விளையாடிய ஆட்டங்களைத் தேடியுள்ளனர்.
இங்கே சுவாரஸ்யமான மற்றொரு விஷயம் என்னவெனில், கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT