Published : 20 Dec 2024 01:24 AM
Last Updated : 20 Dec 2024 01:24 AM
மிசோரம் சிறையிலிருந்த 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த வான்சூயனி (36) மற்றும் லால்சன்மாவி (44) ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த இந்த 2 பேரும், சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக சிறை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சம்பை காவல் நிலைய போலீஸார், சிறையிலிருந்து தப்பிய அந்த 2 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் லால்சன்மாவி என்ற பெண் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு அய்சாலில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தப்பினார். இந்நிலையில், கடந்த மே மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT