Published : 19 Dec 2024 04:24 PM
Last Updated : 19 Dec 2024 04:24 PM

படகு விபத்து எதிரொலி: கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து செல்லும் படகுகளில் லைஃப் ஜாக்கெட் கட்டாயம்

பிரதிநித்துவப்படம்

மும்பை: மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதிய​தில் 13 பேர் உயிரிழந்​த விபத்தின் எதிரொலியாக கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து படகில் சவாரி செல்லும் அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) நடந்த படகு விபத்தில் இருந்து உயிர்பிழைத்தவர்கள் விபத்துக்குள்ளான படகில் போதிய உயிர் காக்கும் உபகரணம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். என்றாலும், பெரும்பாலான மக்களுக்கு லைஃப் ஜாக்கெட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது என்றும், அவசர காலங்களில் அவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு அதிகாரிகள் சொல்லித்தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

மும்பை அருகே​யுள்ள எலிபென்டா தீவில் உள்ள புகழ்​பெற்ற கர்பரி குகைகளை காண மும்பை கடற்​கரையிலிருந்து சுற்றுலா பயணிகள் 100-க்​கும் மேற்​பட்​டோருடன், நீல்​கமல் என்ற படகு மும்​பை​யின் கேட்வே ஆப் இந்தியா பகுதியி​லிருந்து புதன்கிழமை மாலை புறப்​பட்​டது. அப்போது அந்த வழியாக கடற்​படை​யின் ரோந்துப் படகு சென்​றது. அந்தப் படகு கட்டுப்​பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்​தில் மோதி​யது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்​கப்​பட்டனர்.

இதனைத் தொடர்ந்து படகு சவாரிக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கேட்வே ஆஃப் இந்தியாவின் உதவி படகு ஆய்வாளர் தேவிதாஸ் ஜாதேவ், “அலிபாக் (அருகில் உள்ள ராய்காட்), எலிபண்டா தீவுக்கு செல்லும் மக்கள் மற்றும் மும்பை துறைமுகத்தில் சிறிய சவாரி செல்லும் மக்களுக்கு லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

ரிவர் ராஃப்டிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் சத்தீஸ்கரை சேர்ந்த சுற்றுலா பயணியான சுயேஷ் சர்மா கூறுகையில், “லைஃப் ஜாக்கெட்டுக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தால் மட்டுமே அது உதவியாக இருக்கும். அவசர காலங்களில் அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் மக்களுக்கு கற்றுத்தர வேண்டும்.” என்றார்.

படகு உரிமையாளர் சமீர் பமானே கூறுகையில், “வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக அசவுகரியமாக உணரும் பயணிகள் பலர் லைஃப் ஜாக்கெட்டை பயன்படுத்துவதில்லை" என்றார். மேலும் அவர் கூறுகையில் இதே சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லுகையில் படகு சவாரி செய்யும் போது லைஃப் ஜாக்கெட்டுகளை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், ஒரு நபர் கூட லைஃப் ஜாக்கெட் அணியவில்லை என்றாலும் அதிகாரிகள் படகுகளைச் செல்ல அனுமதிப்பதில்லை.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x