Published : 18 Dec 2024 02:05 AM
Last Updated : 18 Dec 2024 02:05 AM
நாட்டில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர் (எஸ்எஸ்டபிள்யு) அகற்றும் பணியாளர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்:
இயந்திரமயமாக்கப்பட்ட "துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை" (நமஸ்தே) திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட தரவுகளின்படி சாக்கடை மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் 54,574 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 37,060 பேர் அதாவது 67 சதவீதம் பேர் பட்டியல் இனத்தை (எஸ்சி) சார்ந்தவர்கள்.
மேலும், 15.73 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும் (ஓபிசி), 8.31 சதவீதம் பழங்குடி பிரிவை (எஸ்டி) சேர்ந்தவர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பொதுப் பிரிவினரில் 8.05 சதவீதம் பேர் மட்டுமே சாக்கடை, கழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலில் உள்ளனர்.
நாடு முழுவதும் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57,758 பேர் எஸ்எஸ்டபிள்யு பணியில் ஈடுபட்டு வருவதாக பதிவு செய்யதுள்ள போதிலும் அதில் 54,574 பேர் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் நமஸ்தே தரவுத்தளத்தில் ஒடிசா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கான தரவு ஒருங்கிணைப்பு தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அதவாலே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT