Published : 29 Jul 2018 12:48 PM
Last Updated : 29 Jul 2018 12:48 PM

ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விசாரணையைச் சந்தித்தாக வேண்டும்: சிபிஐ திட்டவட்டம்

மின்சாரத்துறை ஊழல் வழக்கான எஸ்.என்.சி.லவாலின் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விசாரணையைச் சந்தித்தேயாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

1997-ம் ஆண்டு கனடாவுக்கு லவாலின் விருந்தினரகா பினரயி விஜயன் சென்றார். அங்குதான் அந்த நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் முக்கிய முடிவை எடுத்தார். இது வெறும் ஆலோசனை நிறுவனம்தான் இவர் கனடா வருகைக்குப் பிறகே அந்த நிறுவனம் சப்ளை நிறுவமனாமது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

லவாலின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் காரணமாக கேரள மாநில மின்சார வாரியத்துக்கு ரூ.86.25 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. பள்ளிவசை, செங்குளம், பன்னியார் நீர்மின்சாரத்திட்டங்களை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் குறித்த ஒப்பந்தமாகும் இது. அப்போது கேரள மாநில மின் துறை அமைச்சராக இருந்தவர் இப்போதைய முதல்வர் பினராயி விஜயன்.

1995-ல் கேரள அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமே மேற்கொண்டது லவாலின் நிறுவம். ஆலோசனை ஒப்பந்தங்கள் பிப்ரவரி 24, 1996-ல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பிப்ரவரி 10, 1997-ல் ஆலோசகர் ஒப்பந்தங்கள் அனைத்தும் சப்ளை ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. இது பினராயி விஜயனின் கைங்கரியமே என்று சிபிஐ 12 பக்க பிரமாணப்பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் பினராயி விஜயனை விடுவித்தது தவறு என்று வாதிடுகிறது சிபிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x