Published : 16 Dec 2024 04:04 AM
Last Updated : 16 Dec 2024 04:04 AM

முதல்முறையாக அமைச்சரவை விரிவாக்கம்: மகாராஷ்டிராவில் 39 அமைச்சர்கள் பதவியேற்பு

நாக்பூர்: ம​காராஷ்டிர அமைச்​சரவை நேற்று விரிவாக்கம் செய்​யப்​பட்​டது. நாக்​பூரில் நடைபெற்ற விழா​வில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசி​யவாத காங்​கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்றுக் கொண்​டனர்.

மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்​டே​வின் சிவசேனா, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. மொத்தம் உள்ள 288 தொகு​தி​களில் பாஜக கூட்​ட​ணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக மட்டும் 132 இடங்​களில் வெற்றி பெற்​றது.

மகாராஷ்டிரா​வின் புதிய முதல்​வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னா​விஸ் கடந்த 5-ம் தேதி பதவி​யேற்றுக் கொண்​டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்​வர்​களாக பதவி​யேற்​றனர். இந்நிலை​யில், மகாராஷ்டிர அமைச்​சரவை நேற்று விரிவாக்கம் செய்​யப்​பட்​டுள்​ளது. நாக்​பூரில் நடைபெற்ற விழா​வில், பாஜக, சிவசேனா, தேசி​யவாத காங்​கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்றுக் கொண்​டனர். அவர்​களுக்கு ஆளுநர் சி.பி.ரா​தாகிருஷ்ணன் பதவி பிரமாண​மும், ரகசிய காப்பு பிரமாண​மும் செய்து வைத்​தார். விழா​வில் முதல்வர் பட்னா​விஸ், துணை முதல்​வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.

பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்​குலே, மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்​டீல், சந்திர​காந்த் பாட்​டீல் உட்பட பாஜகவை சேர்ந்த 19 பேர் புதிய அமைச்​சர்​களாக பொறுப்​பேற்றனர். ஏக்நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சி​ மூத்த தலைவர்கள் குலாப்​ராவ் பாட்​டீல், தாதா பூஸ் உட்பட 11 பேர் அமைச்​சர்​களாக பொறுப்​பேற்றனர். அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் மூத்த தலைவர்கள் ஹசன் முஷ்ரிப், தனஞ்​செய் முண்டே உட்பட 9 பேர் அமைச்​சர்​களாக பொறுப்​பேற்றனர்.

மகாராஷ்டிர எம்எல்​ஏக்கள் எண்ணிக்கை​யின் அடிப்​படை​யில் 43 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்க முடி​யும். கடந்த 5-ம் தேதி முதல்​வராக தேவேந்திர பட்னா​விஸும், துணை முதல்​வர்​களாக ஏக்நாத் ஷிண்​டே​வும், அஜித் பவாரும் பதவி​யேற்றுக் கொண்​டனர். தற்போது 39 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்றுள்​ளனர். ஒட்டுமொத்​தமாக மகாராஷ்டிர அமைச்​சர​வை​யில் 42 பேர் இடம்​பெற்றுள்​ளனர்.

புதிய அமைச்​சர்​களில் 33 பேருக்கு கேபினட் அந்தஸ்​தும், 6 பேருக்கு இணை அமைச்சர் அந்தஸ்​தும் வழங்​கப்​பட்​டுள்​ளது. அமைச்​சர​வை​யில் ஒரு முஸ்​லிம், 4 பெண்கள் இடம்​பெற்றுள்​ளனர்.

துணை முதல்​வர்​கள், புதிய அமைச்​சர்​களுக்கான இலாகாக்கள் பின்னர் அறிவிக்​கப்​படும். மாநில உள்துறை, முதல்வர் பட்னா​விஸிடம் இருக்​கும். இந்த துறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்​கப்​படாது. ஷிண்​டே​வின் சிவசேனா அணிக்கு ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, தொழில், சுகா​தா​ரம், போக்கு​வரத்து, தொழில்​நுட்​பம், சுற்றுலா, மராத்தி மொழி வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்​கப்​படும். அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸுக்கு நிதி, கூட்டுறவு, ​விளை​யாட்டு உள்​ளிட்ட துறை​கள் ஒதுக்​கப்​படும் என்று மகாராஷ்டிர பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன

பாஜக ​மாநில தலை​வர் சந்​திரசேகர் பவன்​குலே கேபினட் அமைச்​சராக ப​தவி​யேற்றுள்​ளதால், பு​திய பாஜக தலை​வராக ர​வீந்திர சவாண் நியமிக்​கப்​படலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x