Published : 14 Dec 2024 02:44 AM
Last Updated : 14 Dec 2024 02:44 AM

தன்கர் - கார்கே வாக்குவாதம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ​மாநிலங்​கள​வைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்​கட்​சிகளின் இண்டியா கூட்டணி சார்​பில் கடந்த 10-ம் தேதி நம்பிக்கை​யில்லா தீர்​மானம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை செகரட்டரி ஜெனரலிடம் அந்தத் தீர்​மானம் வழங்​கப்​பட்​டது. இதற்கு ஆளும் பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்​றனர். இந்நிலை​யில், மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், அவைத் தலைவர் தன்கர் பேசி​ய​தாவது: நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்​கட்​சிகளுக்கு உரிமை உள்ளது. அதேநேரத்​தில் விதி​முறைகளை மீறுகின்​றனர். எழுத்​துப்​பூர்​வமாக நோட்​டீஸ் அளித்த 14 நாட்​களுக்​குப் பிறகு​தான் அதன் மீது விவாதம் நடத்த முடி​யும். ஆனால், எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் விதிகளை மீறுகின்​றனர். நான் விவசா​யி​யின் மகன். எந்த பலவீனத்​தை​யும் வெளி​யில் காட்​டிக் கொள்ள மாட்​டேன்.

என் தாய்​நாட்டுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்​வேன். நான் எவ்வளவோ பொறுமை யாக இருந்​து​விட்​டேன். நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அரசி​யலமைப்பு சட்டத்தை நீங்கள் அவமானப்​படுத்து​கிறீர்​கள். இவ்வாறு தன்கர் பேசினார். அதற்கு காங்​கிரஸ் எதிர்க்​கட்​சித் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே கூறும்​போது, ‘‘நீங்கள் விவசா​யி​யின் மகனாக இருந்​தால், நான் கூட தொழிலா​ளி​யின் மகன்​தான். ஆளும் கட்சி உறுப்​பினர்களை பேச அனும​திக்​கிறீர்​கள். அவர்கள் தொடர்ந்து எங்கள் கட்சியை அவமானப்​படுத்தி பேசுகின்​றனர். அதை நீங்கள் ஊக்கப்​படுத்து​கிறீர்​கள்’’ என்றார். இத​னால் அவை​யில் கூச்​சல் குழப்​பம் ஏற்​பட்டது. இதையடுத்து அவை தொடங்கிய ஒரு மணி நேரத்​துக்​குள் நாள் ​முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 3 Comments )
  • பாலரத்னா

    தான் வகிக்கும் பதவிக்குள்ள நெறிமுறைக்குட்பட்டு நடப்பதற்கு பாஜகவினர் யாரும் தயாரில்லை. குடியரசுத் துணைத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பவர் இன்னமும் பிரதமர் பதவியில் இருப்பவரின் கண்ணசைவுக்கேற்ப மாநிலங்களவையை நடத்தி கொண்டிருக்கிறார். இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தீர்மானங்கள் கொண்டு வந்தால் அதனை சந்திக்க திராணி இல்லாமல் தான் விவசாயியின் மகன், தன்னை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன என்றெல்லாம் புலம்புவது கேவலமாக இருக்கிறது.

  • L
    L. Panneerselvam

    ஜகதீப் தங்கர் பேசுவது அபத்தமானது. அவர் தான் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையுடன் நடந்துக் கொள்ளவில்லை, எதிர்கட்சிகள் பேசுவதற்கு போதிய வாய்ப்பு அளிப்பதில்லை, ஆளும் கட்சியின் சார்பாக நடந்துக்கொள்கிறார் - என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினால், தான் ஒரு விவசாயியின் மகன் என்று பயமுறுத்தி எச்சரிக்கிறார். அப்படிப்பார்த்தால், எல்லா அரசியல்வாதிகளும் ஏதாவது ஒரு பிண்ணனியில் இருந்துதான் வந்திருப்பார்கள்! இதுவா பேச்சு? இதைத்தான் தனக்கு ஆதரவான கருத்தாக தங்கர் சொல்கிறாரா? பிஜேபி யை போலவே, மடைமாற்றம் செய்து, பேசுகிறார் தங்கர். எப்படிபட்ட தலைவர்கள் எல்லாம் அலங்கரித்த பதவி அது?!

 
x
News Hub
Icon