Published : 13 Dec 2024 02:09 AM
Last Updated : 13 Dec 2024 02:09 AM
நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் " உலக ஜனநாயகத்தின் கலங்களை விளக்கமாக நாம் இருக்க விரும்பும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குபவர்கள் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களை அதுபோன்ற சர்ச்சைகளுக்குள்ளும் இழுக்கக்கூடாது. முரண்பாடுகள் இருந்தால் சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு அதற்கு உரிய முறையில் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்துக்கான முக்கியத்துவத்தை கருதி இந்திய வணிகங்கள் செழிப்புடன் திகழ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT