Published : 06 Dec 2024 04:13 AM
Last Updated : 06 Dec 2024 04:13 AM

ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.75 லட்சம் கார் வரதட்சணை: மீரட்டில் நடந்த கோலாகல திருமண வீடியோ இணையத்தில் வைரல்

மீரட்: ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.75 லட்சம் கார் வரதட்தணையுடன் மீரட் நகரில் நடைபெற்ற கோலாகல திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள ரெசார்ட் ஒன்றில் அண்மையில் ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது. இது முஸ்லிம் மதத்தினரின் திருமணமாகும். இந்தத் திருமணத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. ரெசார்ட் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. மேலும் மணமகன் வீட்டாருக்கு ரூ.2.5 கோடி ரொக்கம் அடங்கிய சூட்கேஸ்கள், ரூ.75 லட்சம் மதிப்புள்ள கார் வாங்குவதற்கான பணம், ஆடம்பரப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.

மேலும், இந்தியத் திருமணங்களில் நடைபெறும் ஜூதா சுராய் (மணமகனின் செருப்புகளை திருடி வைத்து விளையாடுதல்) நிகழ்ச்சிக்காக மணமகளின் அக்கா, தங்கைகளுக்காக ரூ.11 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. திருமணத்தை நடத்தி வைத்த மவுலானாவுக்கு ரூ.11 லட்சமும், அங்குள்ள மசூதி நிர்வாகத்துக்கு ரூ.8 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பரவி வருகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியை வீடியோ எடுக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால் திருமணத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் வீடியோவை எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டு விட்டார். இந்த திருமணத்தை நடத்தியது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x