Published : 03 Dec 2024 01:32 AM
Last Updated : 03 Dec 2024 01:32 AM
மைசூரு: பயிற்சி முடித்த 4 வாரங்களே ஆன நிலையில் சாலை விபத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் ஹர்ஷ் பர்தன். ஐபிஎஸ் தேர்வில் கர்நாடக கேடரில் கடந்த 2023-ம் ஆண்டு தேர்வாகி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அண்மையில் தனது 4 வார பயிற்சியை சமீபத்தில் முடித்திருந்தார்.
பயிற்சிக் காலம் முடிந்த நிலையில் ஹாசன் மாவட்டம் ஹொளேநர்சிபுராவில் பயிற்சி உதவிக் காவல் கண்காணிப்பாளராக (போலீஸ் ஏஎஸ்பி) பொறுப்பேற்க ஹாசன் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் ஹர்ஷ் பர்தன் காரில் சென்று கொண்டிருந்தார்.
ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே வாகனம் வந்தபோது டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹர்ஷ்பர்தன் உயிரிழந்தார். டிரைவர் காயமடைந்தார். ஹர்ஷ் பர்தன் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT