Published : 02 Dec 2024 04:49 AM
Last Updated : 02 Dec 2024 04:49 AM

ஆந்திராவில் வக்பு வாரியம் கலைப்பு

அமராவதி: ஆந்​திரா​வில் சந்திர​பாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலை​யில், முந்தைய ஆட்சி​யில் அமைக்​கப்​பட்ட வக்பு வாரியம் கலைக்​கப்​படு​வதாக ஆந்திர அரசு அறிவித்​துள்ளது.

இதுகுறித்து ஆந்திர சிறு​பான்​மை​யினர் நலத் துறை கடந்த 30-ம் தேதி வெளி​யிட்ட அரசாணை​யில், ‘ஆந்திர உயர் நீதி​மன்ற உத்தரவை தொடர்ந்து, 11 உறுப்​பினர்கள் அடங்கிய வக்பு வாரிய குழுவை அப்போதைய ஒய்எஸ்ஆர் காங்​கிரஸ் தலைமையிலான அரசு அமைத்​தது. இதுதொடர்​பாக, முந்தைய அரசால் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளி​யிடப்​பட்ட அரசாணை திரும்ப பெறப்​படு​கிறது’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

‘உயர் நீதி​மன்​றத்​தின் கருத்துகளை கவனமாக பரிசீலித்து, நல்லாட்சி நிர்​வாகத்தை பராமரிக்​க​வும், வக்பு வாரி​யத்​தின் சொத்துகளை பாது​காப்பது மற்றும் வக்பு வாரி​யத்​தின் சுமுகமான செயல்​பாட்டை உறுதிசெய்​யும் நோக்​கிலும் அரசாணை திரும்ப பெறப்​படு​கிறது என்று துறை செயலர் கதி ஹர்ஷ்வர்தன் அதில் தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக சிறு​பான்​மை​யினர் நலத் துறை அமைச்சர் ஃபாரூக் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி​யில் வக்பு வாரிய உறுப்​பினர்கள் நியமனத்தை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் சிலர் வழக்கு தொடர்ந்​தனர். இந்த விவகாரத்​தில், வக்பு வாரிய தலைவர் தேர்​தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்ளது. சட்ட சிக்​கல்கள் காரணமாக வக்பு வாரி​யத்​தின் செயல்​பாட்​டில் வெற்றிடம் ஏற்பட்​டுள்ளது. இதை சமாளிக்கவே முந்தைய அரசின் அரசாணையை வாபஸ் பெற்று புதிய அரசாணையை தற்போதைய அரசு வெளி​யிட்​டுள்​ளது.

வக்பு சொத்து​களின் பாது​காப்பு, நிர்வாக மேலாண்மை, சிறு​பான்​மை​யினர் நலன் ஆகிய​வற்றில் முதல்வர் சந்திர​பாபு நாயுடு தலைமையிலான கூட்​டணி அரசு உறு​தியாக உள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாகவே இந்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x