Published : 02 Dec 2024 03:52 AM
Last Updated : 02 Dec 2024 03:52 AM
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சமூகத்தின் அடிப்படையான ஒரு அங்கம்தான் குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழு. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் சென்றால் சமூகம் தானாகவே அழிந்துவிடும் என லக்சன்க்யா சாஸ்திரம் கூறுகிறது. இந்திய மக்கள் தொகை கொள்கை 1998-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சமூகம் நீடித்திருக்க இந்த விகிதம் குறையக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT