Published : 02 Dec 2024 03:39 AM
Last Updated : 02 Dec 2024 03:39 AM

மகாராஷ்டிர வாக்குப் பதிவில் பிரச்சினை: காங். பிரதிநிதிகளுக்கு ஆணையம் அழைப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று. 23-ம்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி கட்சிகள் அதிக இடத்தைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்​துள்ளன.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்​துக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சித் தலைமை அனுப்பிய புகாரில், "மின்னணு வாக்குப்​பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சுமார் 450 புகார்கள் பெறப்​பட்​டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே, வாக்குச்​சீட்டுகள் முறையில் தேர்தலை நடத்தவேண்​டும்" என்று கூறியிருந்தது.

இதையடுத்து டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி பிரதி​நி​தி​களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்​துள்ளது. அப்போது காங்கிரஸ் எழுப்​பி​யுள்ள கவலை, புகார்கள் குறித்து விவாதிக்​கப்​படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x