Published : 02 Dec 2024 03:35 AM
Last Updated : 02 Dec 2024 03:35 AM
புதுடெல்லி: டெல்லியில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் (பேருந்து மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட்டனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் வேலையை இழந்தனர். இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அப்போதைய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 10 ஆயிரம் பேருந்து காவலர்களை மீண்டும் நியமிக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு முதல்வர் ஆதிஷி நேற்று எழுதி உள்ள கடிதத்தில், “பேருந்து காவலர்களை மீண்டும் நியமிப்பது தொடர்பான கோப்பு தங்களுக்கு அனுப்பப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த திட்டத்துக்கு உடனடி யாக ஒப்புதல் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT