Published : 01 Dec 2024 01:14 AM
Last Updated : 01 Dec 2024 01:14 AM

இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வாங்க 3 நாடுகள் விருப்பம்

புதுடெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன.

இந்தியா​வும் ரஷ்யா​வும் இணைந்து பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை தயாரித்​துள்ளன. இந்தியா​வின் டிஆர்டிஓ ரஷ்யா​வின் என்பிஓ ஆகியவை இணைந்து இதை தயாரிக்​கின்றன. இந்தியா​வின் பிரம்​மபுத்ரா மற்றும் ரஷ்யா​வின் மோஸ்கா ஆறுகளின் பெயரை தழுவி பிரம்​மோஸ் என பெயரிடப்​பட்​டுள்​ளது.

நிலம் மற்றும் போர்க்​கப்​பல்​களில் இருந்து இதை ஏவ முடி​யும். ஒலியைப் போல 3 மடங்கு வேகத்​தில் சீறிப் பாயும் இது, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்​படை​யில் சேர்க்​கப்​பட்​டுள்ளன.

ரூ.3,100 கோடி: இந்த பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க பல நாடுகள் விருப்பம் தெரி​வித்து வருகின்​றன்றன. அந்த வகையில் பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க ரூ.3,100 கோடி மதிப்​பிலான ஒப்பந்​தத்​தில் பிலிப்​பைன்ஸ் கையெழுத்​திட்​டுள்​ளது. இது முதல் சர்வதேச ஒப்பந்தம் ஆகும். முதல் தொகுப்பு இந்த ஆண்டின் தொடக்​கத்​தில் பிலிப்​பைன்ஸ் வசம் ஒப்படைக்​கப்​பட்​டது.

பேச்சு​வார்த்தை: இந்நிலை​யில், வியட்​நாம், இந்தோ​னேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய 3 நாடு​கள், பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ள​தாக, பிரம்​மோஸ் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் இணை நிர்வாக இயக்​குநர் அலெக்​சாண்டர் மாக்​சிசேவ் ரஷ்ய செய்தி நிறு​வனத்​திடம் (டாஸ்) தெரி​வித்​துள்ளார். இந்த 3 நாடு​களுடன் பேச்சு​வார்த்தை நடைபெற்று வருவ​தாக​வும் விரை​வில் ஒப்பந்தம் கையெழுத்​தாகும் என்றும் அவர் தெரி​வித்​துள்ளார்.

பிலிப்​பைன்ஸ், இந்தோ​னேசியா, வியட்​நாம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்​னாப்​ரிக்கா ஆகிய நட்பு நாடுகள் பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்​கும் என கடந்த 2021-ல் இந்திய அரசு தெரி​வித்​திருந்​தது. அந்த பட்டியலில் பின்னர் அல்ஜீரியா, கிரீஸ் மற்றும் மலேசியா போன்ற நாடு​களும் இடம்​பெற்றன. இதுபோல, தென் கொரியா, எகிப்து மற்றும் ​தாய்​லாந்து உள்​ளிட்ட பல நாடு​களின் பிர​தி​நி​தி​கள் பிரம்​மோஸ் ஏவு​கணை​யை வாங்​க ஆர்​வம்​ ​கொண்​டுள்​ளதாக தகவல்​கள்​ தெரி​விக்​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x