Published : 30 Nov 2024 03:53 AM
Last Updated : 30 Nov 2024 03:53 AM
தெலங்கானா மாநிலம், குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டம், கன்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (21). இவர் நேற்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது புலி பாய்ந்து, கழுத்தை கவ்வியது. உடன் இருந்தவர்கள் அலறியதால் வனப்பகுதிக்குள் புலி தப்பியோடி விட்டது. பலத்த காயமடைந்த லட்சுமியை, காகஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காகஜ்நகர் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் அலட்சிய போக்கால்தான் புலி தாக்கி லட்சுமி உயிரிழந்தார் என அவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், உயிரிழந்த லட்சுமியின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதாகவும் வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். புலியின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT