Published : 29 Nov 2024 08:52 AM
Last Updated : 29 Nov 2024 08:52 AM
புதுடெல்லி: உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அண்மையில் பயணம் மேற்கொண்ட நாடுகளின் வீடியோ தொகுப்பு பிரதமரின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், ஆஸ்திரியாவில் வந்தே மாதரம் பாடல், போலந்து, ரஷ்யா, பூடானில் கர்பா நடனம், பூடானில் இந்திய கலாச்சார நடனம், சிங்கப்பூரில் பரத நாட்டியம், லாவோஸில் ராமாயணம் அரங்கேற்றம், பிரேசிலில் சம்ஸ்கிருத வேத மந்திரங்கள், ராமாயணம் அரங்கேற்றம் உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோக்களுடன் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது. நான் செல்லும் இடமெல்லாமல் நமது நாட்டின் வரலாறு, கலாச்சாரம் செழித்தோங்கி இருப்பதை பார்க்க பூரிப்பாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT