Last Updated : 29 Nov, 2024 03:31 AM

 

Published : 29 Nov 2024 03:31 AM
Last Updated : 29 Nov 2024 03:31 AM

பெங்களூருவில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு வழக்​கறிஞர் சங்கத்​தின் சார்​பில் கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா குடிமை​யியல் நீதி​மன்ற வளாகத்​தில் நேற்று​முன்​தினம் நடைபெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தினராக பங்கேற்ற கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகை​யில், “பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்​களுக்கு அடிமை​களாக இருந்​தனர். ஆனால் கன்னடர்கள் ஒருபோதும் அவர்​களுக்கு அடிமையாக இருக்க​வில்லை. மொழி என்பது ஒரு மாநிலத்​தின் எல்லையை தீர்​மானிக்​கும் விஷயமாக இருக்​கிறது. பெங்​களூரு​வில் சில இடங்​களில் பிற மொழி​யினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்​கிறது. இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்றுக்​கொண்டு, கன்னடத்​திலே பேச வேண்​டும்” என்று பேசினார். இவரது பேச்சு கர்நாடக தமிழர்​களிடையே கடும் அதிருப்​தியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து தாய்​மொழி கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் எஸ்.டி.கு​மார் கூறுகை​யில், “நீதிபதி எம்.ஐ.அருணின் கருத்​தால் தமிழர்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் தனது கருத்தை திரும்ப பெறுவதுடன், அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்​டும். நீதிப​திகள் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்​பட்டு சிந்​திக்க வேண்​டும். ஆங்கிலேயர்​களுக்கு எதிரான சுதந்திர போராட்​டத்​தில் தமிழர்கள் வீரியமாக போராடி​னார்​கள்” என்றார். பெங்​களூருவை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஞானம
ணி​யின் மகன் பாவலர் மகிமை தாஸ் கூறும்போது: பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர்​களுக்கு எதிரான போராட்​டத்தை முன்னெடுத்​தவர்​களில் பெரும்​பாலானோர் தமிழர்​கள்.

என் தந்தை ஞானமணி கோலார் தங்க வயலில் இருந்து வந்து இங்கு நடந்த போராட்​டங்​களில் பங்கேற்று சிறை சென்​றார். கன்டோன்​மென்ட் ஜில்லா காங்​கிரஸில் முக்கிய பிரமுகர்​களாக இருந்த மாசிலாமணி, முனிரத்னம், ஜெயரத்​னம், கிருஷ்ணன், அன்னி​யம்​மாள் போன்​றோர் முக்​கியமான சுதந்திர போராட்ட வீரர்​களாக இருந்​தனர். இதுபோன்ற வரலாற்று உண்மையை அறியாமல், நீதிபதி எம்.ஐ.அருண் பேசுவது ஏற்புடையது அல்ல’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x