Published : 28 Nov 2024 02:51 AM
Last Updated : 28 Nov 2024 02:51 AM
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது. இந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப், பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்து வருகிறது. இது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு ரயில் தயாரிக்க சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) செலவாகும்.
இருக்கை வசதிகளை மட்டுமே கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் ஏரோடைனமிக் வெளிப்புறம், தானியங்கி கதவுகள், சிசிடிவி, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கும். இந்த ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT