Published : 26 Nov 2024 02:39 AM
Last Updated : 26 Nov 2024 02:39 AM

உ.பி., பாலத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது ஆற்றில் கார் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உ.பி.​யில் உடைந்த பாலத்​தில் இருந்து கார் ஆற்றில் விழுந்​ததால் 3 பேர் உயிரிழந்​தனர். கூகுள் மேப் உதவி​யுடன் சென்​ற​தால் இந்த விபத்து நேரிட்​டதாக தெரிய​வந்​துள்ளது.

உ.பி.​யின் பரேலி மாவட்டம் பரித்​பூரில் ராம்​கங்கா ஆறு செல்​கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்​தின் நடுப்​பகுதி சமீபத்திய மழை வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்​கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்​றது. இந்நிலை​யில் அந்த கார் உடைந்த பாலத்​தில் இருந்து ஆற்றில் விழுந்​தது.

இந்த விபத்து மறுநாள் காலை​தான் உள்ளூர் மக்களுக்கு தெரிய​வந்​தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீ​ஸார் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து நடைபெற்ற மீட்​புப் பணியில் 3 பேரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்​கப்​பட்டன.

விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை​யில், “குரு​குராமில் உள்ள ஒரு செக்​யூரிட்டி நிறு​வனத்​தின் அடையாள அட்டை காரிலிருந்து கண்டெடுக்​கப்​பட்​டது. இதையடுத்து உயிரிழந்த அனைவரும் அடையாளம் காணப்​பட்​டனர். இவர்கள் அனைவரும் உ.பி.​யின் ஃபருக்​கா​பாத்தை சேர்ந்​தவர்​கள். அவர்​களின் செல்​போன்கள் பரிசோ​திக்​கப்​பட்​ட​தில் அவர்கள் கூகுள் மேப் உதவி​யுடன் காரில் பயணம் செய்தது தெரிய​வந்​தது” என்றார்.

விபத்​தில் இறந்த ஒருவரின் குடும்பத்​தினர் கூறும்​போது, “பாலம் முழு​மையற்று இருப்பதை கூகுள் மேப் காட்​டாது. பாலத்​தின் தொடக்​கத்​தில் அதிகாரிகள் தடுப்பு​களும் எச்சரிக்கை பலகை​யும் வைத்​திருக்க வேண்​டும்” என்றனர். இதுகுறித்து பரித்​பூர் துணை ஆட்சியர் குலாப் சிங் கூறுகை​யில், “இது​குறித்து நாங்​கள் ​விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளோம். இதற்கு ​காரணமான அதிகாரி​கள் மீது நட​வடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x