Published : 25 Nov 2024 05:56 AM
Last Updated : 25 Nov 2024 05:56 AM

முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகளுக்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸார். படம்: பிடிஐ

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதைத்​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள் மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இருப்​பினும், நீதி​மன்ற உத்தர​வின் அடிப்​படை​யில் மசூதியை ஆய்வு செய்​வ​தில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர். இதையடுத்து, அந்த பகுதி​யில், போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் வெடித்​தது.

இதுகுறித்து மொர​தாபாத் மண்டல ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் கூறிய​தாவது: ஒரு வழக்​கறிஞர் தலைமை​யில் தொல்​லியல் ஆய்வுக் குழு பணியை தொடங்​கியபோது, மசூதிக்கு அருகில் கூடிய கூட்டம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்தது. ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கூடிய நிலை​யில், மசூதிக்​குள் போலீ​ஸார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்​றது. அப்போது, கூட்​டத்​தில் இருந்த சிலர் போலீ​ஸாரை நோக்கி கற்களை வீசி தாக்​குதல் நடத்த தொடங்​கினர். பத்துக்​கும் மேற்​பட்ட வாகனங்​களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறை​யில் ஈடுபட்​டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்​படுத்த போலீ​ஸார் கண்ணீர் புகை குண்​டுகளை வீசி கும்பலை கலைத்​தனர்.

இந்த வன்முறை சம்பவத்​தில் 3 பேர் உயிரிழந்​தனர். 30-க்​கும்மேற்​பட்ட போலீஸார் காயமடைந்​தனர். உயிரிழந்​தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. ஜமா மசூதி அமைந்​துள்ள பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஆஞ்​சநேய கு​மார் சிங் தெரி​வித்​தார். சர்ச்​சைக்​குரிய ஜமா மசூதி ஆய்வு ​விவ​காரம் தற்​போது சம்​பல் பகு​தி​யில் ப​தற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x