Published : 25 Nov 2024 05:12 AM
Last Updated : 25 Nov 2024 05:12 AM
மகாராஷ்டிராவில் அமைச்சர்கள், காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோல் உள்ளிட்டோர் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோல் உள்ளிட்டோர் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோல் பண்டாரா மாவட்டம் சகோலி தொகுதியில் போட்டியிட்டார். இவர் பாஜகவின் அவினாஷ் பிரமன்கரை வெறும் 208 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மாலேகான் மத்திய தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்போதைய எம்எல்ஏ முப்தி முகமது இஸ்மாயில் அப்துல் காலிக், இந்தியன் செக்யூலர் லார்ஜஸ்ட் அசெம்ப்ளி ஆப் மகாராஷ்டிரா கட்சி வேட்பாளர் ஆசிப் ஷேக் ரஷீதை 162 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதுபோல நவிமும்பையின் பேலாபூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மந்த மாத்ரே 377 வாக்கு வித்தியாசத்திலும், புல்தானா தொகுதியில் சிவசேனாவின் சஞ்சய் கெய்க்வாட் 841 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
கர்ஜாத்-ஜம்கெத் தொகுதியில் என்சிபி (சரத் பவார்) எம்எல்ஏ ரோஹித் பவார் 1,243 வாக்கு வித்தியாசத்திலும் அம்பேகான் தொகுதியில் மாநில அமைச்சரும் என்சிபி (அஜித்) வேட்பாளருமான திலிப் வால்சே பாட்டீல் 1,523 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மற்றொரு அமைச்சரும் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளருமான தனஜி சாவந்த், பரந்தா தொகுதியில் 1,509 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் அதுல் சாவே (பாஜக) 2,161 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment