Published : 24 Nov 2024 03:13 AM
Last Updated : 24 Nov 2024 03:13 AM

14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி

புதுடெல்லி: நாடு முழு​வதும் 14 மாநிலங்​களில் உள்ள 48 சட்டப்​பேரவை தொகு​தி​கள், கேரளாவின் வய நாடு மற்றும் மகாராஷ்டிரா​வின் நாந்​தேடு மக்களவை தொகு​தி​களி​ல் கடந்த 13 மற்றும் 20-ம் தேதி​களில் இடைத் தேர்தல் நடைபெற்​றது.

உத்தர பிரதேசத்​தில் 9, ராஜஸ்​தானில் 7, மேற்கு வங்கத்​தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சா​பில் தலா 4, கர்நாட​கா​வில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்​கிமில் தலா 2 தொகு​திகள் குஜராத், உத்த​ராகண்ட், மேகாலயா, சத்தீஸ்​கரில் தலா ஒரு சட்டப் பேரவை தொகு​தி​களில் இடைத் தேர்தல் நடைபெற்​றது. இதன் முடிவுகள் நேற்று வெளி​யா​யின. மக்களவை தொகுதி இடைத் தேர்​தலில் கேரளா​வின் வயநாடு தொகு​தி​யில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட்ட பிரி​யங்கா காந்தி வெற்றி பெற்​றார். மகாராஷ்டிரா​வின் நாந்​தேடு தொகு​தி​யில் பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட டாக்டர் ஹம்பார்டே வெற்றி பெற்​றார்.

உத்தர பிரதேசத்​தின் 9 சட்டப்​பேரவை தொகு​தி​களில் பாஜக 6, சமாஜ்வாதி 2, ராஷ்ட்ரிய லோக்​தளம் 1 தொகு​தி​களில் வென்றன. ராஜஸ்​தானின் 7 தொகு​தி​களில் பாஜக 5, காங்​கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடங்​களில் வென்றன. மேற்​கு​ வங்​கத்​தின் 6 தொகு​தி​களில் திரிண​மூல் காங்​கிரஸ் வென்​றது. அசாமின் 5 தொகு​தி​களில் பாஜக 3, அசாம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்​தி​லும் வென்றன.

பிஹாரின் 4 தொகு​தி​களில் பாஜக 2, ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்​தான் அவாமி மோர்ச்சா தலா 1 இடத்​தி​லும் வென்றன. பஞ்சா​பில் ஆம் ஆத்மி 3, காங்​கிரஸ் 1 இடங்​களில் வென்றன. கர்நாட​கா​வில் 3 இடங்​களி​லும் காங்​கிரஸ் வென்​றது. கேரளா​வில் காங்​கிரஸ் மற்றும் மார்க்​சிஸ்ட் கட்சி தலா 1 இடத்​தில் வென்றன.

மத்தியப் பிரதேசத்​தில் பாஜக, காங்​கிரஸ் தலா 1 இடத்​தில் வென்றன. சிக்​கிம் மாநிலத்​தில் உள்ள 2 தொகு​தி​களில் சிக்​கிம் கிராந்​தி​காரி மோர்ச்சா கட்சி வென்​றது. குஜராத்​தில் பாஜக 1, உத்த​ராகண்ட்​டில் பாஜக 1, மேகால​யா​வில் தேசிய மக்கள் கட்சி 1 இடத்​தி​லும், சத்தீஸ்​கரில் பாஜக 1 இடத்​தி​லும் வென்றன. இடைத் தேர்​தல் நடை​பெற்ற 48 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் 20-ல் பாஜக வென்று ​முதல்​ இடத்​தை பிடித்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x