Published : 22 Nov 2024 03:18 AM
Last Updated : 22 Nov 2024 03:18 AM

தெலங்கானாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்

வாரங்கல்: ​தெலங்​கானா​ மாநிலம் வாரங்கல் ராம்​பல்​லியை சேர்ந்​தவர் ஏலேந்தர் (35). இவர் கினரா எனும் இடத்​தில் சொந்​தமாக வீடுகட்டி வருகிறார். இவர் புதன்​கிழமை மாலை புதிதாக கட்டப்​பட்டு வரும் தனது வீட்டை காண பைக்​கில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்போது, இவருக்கு பின்​னால் வேகமாக வந்த லாரி மோதி​யதில் ஏலேந்தர் தூக்கி எறியப்​பட்​டார். இதனை பார்த்து பொது​மக்கள் கூச்​சலிடவே, லாரி ஓட்டுநர் லாரியை பின்​னால் எடுத்​தார். இதனால், லாரி​யின் சக்கரம், சாலை​யில் விழுந்த ஏலேந்​தரின் இரு கால்​களின் மீது ஏறி இறங்​கியது. உயிருக்கு போராடி​ய ஏலேந்தர், மருத்​துவ​மனை​யில் கொண்டு போய் சேர்க்​கும்படி அங்குள்ள மக்களிடம் கெஞ்​சினார். ஆனால், யாரும் இதனை கண்டு​கொள்​ளாமல், காப்​பாற்ற முன் வரவில்லை.
மாறாக அங்கிருந்​தவர்​கள், தங்களின் செல்​போன்​களில், ஏலேந்தர் படும் அவஸ்​தையை படம் பிடித்​தனர்.

சிலர் செல்ஃபி கூட எடுத்​துக்​கொண்​டனர். இதில் யாரோ 108 ஆம்புலன்​ஸுக்கு தகவல் கொடுத்​த​தில், 15 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்​திற்கு வந்து, ஏலேந்தரை அருகே உள்ள ஓர் அரசு மருத்​து​மனைக்கு கொண்டு போனது. அங்கு சிகிச்சை அளித்​தும் பலனின்றி சில நிமிடங்​களி​லேயே ஏலேந்தர் பரிதாபமாக உயிரிழந்​தார். சில நிமிடங்களுக்கு முன் கொண்டு வந்திருந்​தால், ஒருவேளை ஏலேந்தர் பிழைத்​திருக்​கலாம். ஏனெனில் ரத்தம் அதிகமாக போய் விட்டது என மருத்​துவர்கள் தெரி​வித்​தனர். இது தொடர்பாக வாரங்கல் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, லாரி ஓட்டுநர் லட்சுமணனை கைது செய்​துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x