Published : 22 Nov 2024 02:58 AM
Last Updated : 22 Nov 2024 02:58 AM
மிசோரம் மாநிலத்தில் ரூ.86 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் இந்திய – மியான்மர் எல்லையில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் ஒரு கிராமத்தில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர். எனினும் அவர்கள் கொண்டுவந்த பார்சல் சிக்கியது. இதில் 28.52 கிலோ மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் இருந்தன. ரூ.85.56 கோடி மதிப்பிலான இந்த மாத்திரைகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
இதுபோல் சம்பாய் மாவட்டத்தில் மற்றொரு நடவடிக்கையில் ரூ.39 லட்சம் மதிப்பிலான 52 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மியான்மரை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT