Published : 20 Nov 2024 10:29 AM
Last Updated : 20 Nov 2024 10:29 AM

ஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 12.71% வாக்குகள் பதிவு

கோப்புப்படம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்​தில் இன்று 2-ம் கட்ட சட்டப்​பேர​வைத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 12.71 சதவீத வாக்குகள் அங்கு பதிவு.

இன்று அந்த மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் 81 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்​கட்​டமாக 43 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இரண்​டாம் கட்டமாக இன்று 38 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற உள்ளது. இந்த தொகு​தி​களில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்​தில் உள்ளனர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்​ட​ணிக்​கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நிலவு​கிறது.

ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டப்​பேர​வைத் தொகு​தி​கள், வயநாடு, நான்டெட் மக்​கள​வைத் தொகு​தி​களின் இடைத்​தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை​யும் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x