Published : 20 Nov 2024 03:02 AM
Last Updated : 20 Nov 2024 03:02 AM

ஜார்க்கண்ட் பேரவைக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல்

ஜார்க்கண்டில் இன்று இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தின் சாகிப்கன்ஜ் நகரில் தேர்தல் பயன்பாட்டுக்காக ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. படம்: பிடிஐ

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இன்று 2-ம் கட்ட சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் 81 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்​கட்​டமாக 43 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இரண்​டாம் கட்டமாக இன்று 38 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற உள்ளது. இந்த தொகு​தி​களில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்​பாளர்கள் களத்​தில் உள்ளனர்.

15 தொகு​தி​களில் இடைத்​தேர்தல்: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்​ட​ணிக்​கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நிலவு​கிறது.

நாடு முழு​வதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் மற்றும் 2 மக்கள​வைத் தொகு​தி​களுக்கு இடைத்​தேர்தல் நடத்​தப்​படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்​திருந்​தது. முதல்​கட்​டமாக கடந்த 13-ம் தேதி கேரளா​வின் வயநாடு மக்கள​வைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்​களின் சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இடைத் தேர்தல் நடைபெற்​றது.

இதைத் தொடர்ந்து இரண்​டாம் கட்டமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 15 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் மற்றும் மகாராஷ்டிரா​வின் நான்டெட் மக்கள​வைத் தொகு​திக்கு இன்று இடைத்​தேர்தல் நடைபெறுகிறது.

அதிகபட்​சமாக உத்தர பிரதே சத்தில் 9 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் ஆளும் பாஜக​வுக்​கும் சமாஜ்வா​திக்​கும் இடையே நேரடி போட்டி நிலவு​கிறது. வரும் 2027-ம் ஆண்டில் உத்தர பிரதேச சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்​டமாக இடைத்​தேர்தல் முன்னிறுத்​தப்​படு​வ​தால் மிகுந்த முக்​கி​யத்துவம் பெற்றுள்​ளது.

ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல 48 சட்டப்​பேர​வைத் தொகு​தி​கள், வயநாடு, நான்டெட் மக்​கள​வைத் தொகு​தி​களின் இடைத்​தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை​யும் வரும் 23-ம் தேதி நடை பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x