Published : 20 Nov 2024 01:53 AM
Last Updated : 20 Nov 2024 01:53 AM

இந்திய வசீகரப் பெண் போட்டியில் பட்டம் வென்றார் 22 வயது சட்டக்கல்லூரி மாணவி

புனேயைச் சேர்ந்த 22 வயது சட்ட மாணவி இவ்வாண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார்.

சிவாங்கி தேசாய் மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள இந்திய சட்டப் பள்ளியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். மாடலிங்கில் ஆர்வமுள்ள அவர் இந்திய வசீகரப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தந்தை இந்திய கடற்படை அதிகாரியாக உள்ளார். அவரது தயார் மருத்துவர். சிவாங்கிக்கு சிறு வயதிலேயே மாடலிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. 2018-ம் ஆண்டு ஆர்எஸ்ஐ ராணுவ அமைப்பின் ‘மே குயின்’ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 16. அதன் பிறகு பல்வேறு அழகிப் போட்டிகளில் அவர் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில், வசீகரப் போட்டியில் சிவாங்கி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

அவர் மாடலிங்கில் ஈடுபட்டுக்கொண்டே தொடர்ந்து சட்டப் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பேஷன், விளையாட்டு, பொழுதுபோக்கு துறை வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x