Published : 19 Nov 2024 03:26 AM
Last Updated : 19 Nov 2024 03:26 AM
பிரச்சாரங்களி்ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகார் தொடர்பாக பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரங்களி்ல் ஈடுபட்டதாக ஒன்றன் மீது ஒன்று குற்றம்சாட்டின. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, இரு கட்சிகளின் தலைவர்களும் விதிகளை மீறியது தொடர்பான புகாருக்கு விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பியது அதில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இரு கட்சியின் தலைவர்களும் திங்கள்கிழமை (நவம்பர் 18) மதியம் 1 மணிக்குள் விளக்கம் தங்களது விளக்கத்தை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.
இந்த நிலையில், புகார் தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளன. ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் நரேநேதிர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதேபோன்று இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT