Last Updated : 29 Jun, 2018 04:00 PM

 

Published : 29 Jun 2018 04:00 PM
Last Updated : 29 Jun 2018 04:00 PM

பாவ மன்னிப்பு கோர வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்: விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு

கேரளாவில் மலங்காரா ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி 5 பாதிரியார்கள் பாலியல் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்கள் 5 பேர் மீதான போலீஸ் விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டக் கடிதம் மாநில காவல்துறை தலைவருக்கு வந்தது. விசாரணையை உடனடியாக முடுக்கிவிடும்பொருட்டு காவல்துறை தலைவர் , குற்றப்பிரிவு உயரதிகாரிகளிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளார்.

முன்னதாக இப்பாதிரியார்கள் மீது தேவாலயத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.இருப்பினும் காவல்துறை விசாரணையில் அவர்கள் மீது சட்டப்படி தண்டனை வழங்க ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிரியார்கள் பேசிய ஆடியோ

சர்ச்சில் உறுப்பினராக உள்ள ஒருவரின் மனைவி பாவமன்னிப்பு கேட்கவந்தபோது, அவரை மிரட்டி அங்குள்ள பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அப்பெண்ணின் திருமணத்திற்கு முன்பே கூட இப்படியான பாலியல் வன்கொடுமையை பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் கணவர் பாதிரியார்கள் பேசிய ஆடியோ கிளிப்பை கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில் சர்ச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் பாவமன்னிப்புக்காக தனது ரகசியங்களை பேசியதை வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் இந்தப் பாதிரியார்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

புகார் கடிதம் பெறப்பட்டபிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பாதிரியார்களும் சர்ச்சிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x