Published : 09 Nov 2024 08:15 AM
Last Updated : 09 Nov 2024 08:15 AM
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனுசக்தி நகர் தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சார்பில் பகத் அகமது போட்டியிடுகிறார்.
கணவருடன் ஸ்வரா: இந்நிலையில், அவருக்கு ஆதரவாக கிரவுடுஃபண்ட் மூலம் நிதி திரட்டும் முயற்சியை அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஸ்வரா பாஸ்கர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்வரா பாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய கணவர் பகத் அகமது அனுசக்தி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மக்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும், படித்த, முற்போக்கான இளம் தலைவரான அவருக்கு நன்கொடை வழங்கி
ஆதரியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். பகத் அகமது முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சியில் இணைந்தார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. அதேபோல் சிவ சேனா கட்சியிலும் 2022-ம் ஆண்டு பிளவு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT