Published : 03 Nov 2024 12:52 AM
Last Updated : 03 Nov 2024 12:52 AM
கொல்கத்தா: கிழக்கு ரயில்வே மண்டலத்தில் மகளிர் ரயில் பெட்டிகள் மற்றும் மகளிர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 1,400-க்கும் மேற்பட்ட ஆண் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் ரயில்களில் உள்ள மகளிர் பெட்டிகள் மற்றும் மகளிர் சிறப்பு ரயில்களில் ஆண்கள் ஏறினால் 139 என்ற எண்ணுக்கு அழைத்து ரயில்வே அதிகாரிகளின் உதவியை நாடலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கடந்த மாதம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மகளிர் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 1,400-க்கும் மேற்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டை கிடைக்க ரயில்வே சட்டத்தில் இடம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT