Published : 01 Nov 2024 09:48 AM
Last Updated : 01 Nov 2024 09:48 AM
பெங்களூரு: பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1963-ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிபிஎல் நிறுவனத்தை நிறுவினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டிபிஜி நம்பியார், இந்தியாவின் தரமான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பிபிஎல் நிறுவனத்தை தொடங்கினார்.
மருத்துவ உபகரணங்கள், தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், ஏசி, ஆடியோ சாதனம், தொலைத்தொடர்பு சாதனம் போன்றவற்றை பிபிஎல் உற்பத்தி செய்தது. 1980 மற்றும் 1990-களில் பிபிஎல் வண்ணத்தால் தொலைக்காட்சிகள் மிக பிரபலமானதாக இந்திய மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், டிபிஜி நம்பியாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், கர்நாடக மாநில தொழில் துறை அமைச்சர் எம்பி பாட்டீல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT