Published : 30 Oct 2024 01:57 AM
Last Updated : 30 Oct 2024 01:57 AM
புதுடெல்லி: 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீபவாளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமைய உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். எனவே, இந்த தீபாவளி பண்டிகை நாம் அனைவருக்கும் பிரம்மாண்டமானதாகவும், சிறப்பு வாய்ந்தாகவும் இருக்கும். இதனை காணும் நாம் அனைவரும் அதிஷ்டசாலிகள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட காலம் இழுபறியில் இருந்துவந்த பிரச்சினை கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம், அதற்கு பதிலாக மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியில் மிகப்பெரிய இடத்தை ஒதுக்கும்படி உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அயோத்தியில் கட்டடப்பட்ட ராமர் கோயில் இவ்வாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. இது, அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் தீபாவளி பண்டிகையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT