Published : 17 Jun 2018 09:44 AM
Last Updated : 17 Jun 2018 09:44 AM

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திராவுக்காக போராட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டம்

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்காவிட்டால் ஆந்திர உரிமைக்காக போராட்டம் நடத்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

நிதி ஆயோக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பிறகு, சந்திரபாபு நாயுடு முதன் முறையாக பிரதமரை சந்திக்க உள்ளார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி, 15-வது நிதிக்குழு பரிந்துரை குறித்து பேச, 24 பக்க அறிக்கையை சந்திரபாபு தயாரித்துள்ளார். அகர வரிசைப்படி சந்திரபாபு நாயுடு முதலில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவரை பேச அனுமதிக்காவிட்டால், ஆந்திர உரிமைக்காக இந்தக் கூட்டத்திலேயே போராட அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x