Published : 28 Oct 2024 12:46 AM
Last Updated : 28 Oct 2024 12:46 AM

சத்தீஸ்கரில் 54 போலீஸாரை கொன்ற, 226 வழக்குகள் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

கோப்புப் படம்

நாக்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்ட காருண்யா வளப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் முகாம் அமைத்து செயல்படுகின்றனர். அடர்ந்த வனப் பகுதி, மலைகள் என யாரும் எளிதில் செல்ல முடியாத நிலப்பரப்பு என்பதால், மக்கள் விடுதலை கொரில்லா படை (பிஎல்ஜிஏ) என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வந்தனர்.

மேலும், சத்தீஸ்கரின் அபுஜ்மார் என்ற அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தலைமை அலுவலகமும் செயல்பட்டு வந்தது. மத்தியில் பாஜக வந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. சரணடைபவர்களின் மறு வாழ்வுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அபுஜ்மார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் தலைமை அலுவலகத்தை சத்தீஸ் கர் போலீஸார் மற்றும் அதிரடிப் படை கமாண்டோக்கள் கடந்த 21-ம் இருந்தவர். தேதி முற்றுகையிட்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் நடந்த மோதலில் 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர். பலர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இறந்த வர்களின் உடல்களை, சரணடைந்த மாவோயிஸ்ட்டுகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்றது.

இதில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் அன்கலு தாஸ்ரு துலாவி (எ) சவோஜி துலாவி (65) உயிரிழந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் மேலும் ஒரு ஆண் மற்றும் 3 பெண் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தண்டகாருண்யா வளப் பகுதியை முழுவதும் தெரிந்து வைத்திருந்தவர் சவோஜி. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் இவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவர்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பழங்குடியினத்தை சேர்ந்தவர் சவோஜி. மாவோயிஸ்ட் இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு சேர்ந்து 33 ஆண்டுகளுக்கு மேல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.16 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இவர் 54 போலீஸார் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பவர்களை (இன்பார் மர்களை) சுட்டுக் கொன்றுள்ளார். மேலும், 85 துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டுள்ளார். பல முறை இவர் சுற்றி வளைக்கப்பட்ட போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இவர் மீது மொத்தம் 226 வழக்குகள் பதிவாகி உள்ளன. மாவோயிஸ்ட் இயக்கத்திலேயே அதிக வழக்குகள் உடையவராக சவோஜி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x