Published : 27 Aug 2014 12:20 PM
Last Updated : 27 Aug 2014 12:20 PM

2ஜி வழக்கை தாமதப்படுத்தவில்லை: சி.பி.ஐ.

2ஜி வழக்கை தாமதப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை சி.பி.ஐ., மறுத்துள்ளது. மேலும், வழக்கு சுமுகமாக நடைபெற எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 2ஜி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரபல வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஒப்படைத்துவிட்டதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

இவற்றோடு சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அளித்துள்ள கருத்தும் இடம்பெற்றுள்ளது. அதில், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை என்று சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்தை சி.பி.ஐ. கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்துள்ள பொது நல மனுவுக்கு வரும் செப்டம்பர் 2-ம் தேதி வழக்கறிஞர் வேணுகோபால் பதிலளிக்க உள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் தவறான முன்னுரையைக் கொண்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.இயக்குநர் ரஞ்சித் சின்ஹா முயற்சிப்பதாக பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x