Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

ராமர் கோயில் பிரச்சினையை அடுத்த ஆண்டு எழுப்புவோம்

ராமர் கோயில் பிரச்சினையை அடுத்த ஆண்டு எழுப்புவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மூத்த தலைவர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தற்போது ராமர் கோயில் பிரச்சினை அமைதிப்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அயோத்தியில் நிரந்தரமான ராமர் கோயில் எழுப்பப்படும். எனினும், அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் `ராமோத்ஸவ்' கொண்டாட்டத்தின் போது ராமர் கோயில் பிரச்சினையை எழுப்ப உள்ளோம். மேலும், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. `லவ் ஜிஹாத்' எனும் இஸ்லாமிய ஆண்கள், காதல் என்ற பெயரில் வேற்று மதப் பெண்களைக் குறிவைக்கும் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

இளைஞர்களுக்கு இந்து மதத்தின் பெருமைகளை விளக்கும் விதத்தில் வரும் நவம்பர் மாதம் 21 முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் `உலக இந்து மாநாடு' நடத்தப்பட இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x