Published : 14 Oct 2024 05:57 AM
Last Updated : 14 Oct 2024 05:57 AM
நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உதவி செய்ய வேண்டும். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழப்பு அவமானகரமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தர்மம் என்பது ஒரு மதம் கிடையாது. இது இந்தியாவின் அடையாளம். இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இடையிலான போரால் உலகளவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. நாம் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில் வாழ்கிறோம். இதில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்காகவே வால்மீகியும் ரவிதாஸும் ராமாயணத்தை எழுதினர். இந்த இரு துறவிகளின் பிறந்தநாளையும் ஒன்றுபட்டு கொண்டாடவேண்டும். இதில் பிரிவினையை அனுமதிக்கக்கூடாது. சாதி பிரிவினைகளுக்கு இந்துக்கள் இடம் அளிக்கக்கூடாது. தலித், நலிவுற்ற மக்களை இந்துக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT