Published : 08 Oct 2024 09:14 AM
Last Updated : 08 Oct 2024 09:14 AM

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்., - தேசிய மாநாடு கட்சி கூட்டணி 40+ இடங்களில் முன்னிலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி - 48, பாஜக - 29, பிடிபி - 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆரம்ப நிலையில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. படிப்படியாக வாக்கு எண்ணிக்கை நிலவர்த்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி - 48, பாஜக - 29, பிடிபி - 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவர் ஒமர் அப்துல்லா அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்,

முதல் தேர்தல்.. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.

இத்தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 43 இடங்களிலும், பாஜக 27, மக்கள் ஜனநாயக கட்சி 7, மற்றவர்கள் 13 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பிந் தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x